இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (08.08.2024 – வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

பெரமுனவின் வேட்பாளர் !!

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். 

2.

தேர்தல் முடிவு மக்களிடமே!! 

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதால் இனி தமக்குச் சாதகமான  முடிவுகளை மக்கள் தாமே எடுக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

3.

இன்று தமிழ் பொதுவேட்பாளர் அறிவிப்பு!! 

நடைபெறவுள்ளது தேர்தலில் களமிறக்கப்படவுள்ள தமிழ் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும். 

4.

பிரதேச சபையால் இடித்து அகற்றப்பட்ட மதில்கள்!!

வடமராட்சி பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி முறைகேடாகக் கட்டப்பட்டு வந்த மதில்கள் நேற்றையதினம்(07) பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

5.

வட்ஸ்அப் இல் வந்த மாற்றம்!!

உலகின் பிரபலமான Messaging செயலியான வாட்ஸ்அப் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

WhatsApp Channel மற்றும் Business கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button