இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (02.09.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

சென்னை – யாழ் புதிய விமான சேவை ஆரம்பம்!!

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம். விமான நிலையத்திற்கு  புதிய விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. 

  IndiGo விமானம் நேற்று  3.10 மணியளவில் தரையிறங்கியது இதன்போது போது விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. 

2.

சஜித்திற்கே ஆதரவு – தமிழரசுக்கட்சி தீர்மானம்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

3.

தோட்டாவுடன் விமானப் படை வீரர் கைது!! 

துபாய்க்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச்  சென்ற ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் ஒருவர் ரி-56 துப்பாக்கியின் தோட்டாவுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4.

5 வருட அவகாசம் கோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!

கடந்த 2 வருடத்தில் கட்டியமைத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்தவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருகிறேன். அதற்காக 5 வருட அவகாசம் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். 

5.

மட்டக்களப்பில் புதிய ஆயர் பொறுப்பேற்பு!!

மட்டக்களப்பு மாவட்ட ஆயராக கலாநிதி அன்ரன் ரஞ்சித் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். 

6.

விடுமுறை தொடர்பான புதிய வர்த்தமானி வெளியானது!! 

2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களை குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button