1.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான மூவர் விடுதலை!!
கிளைமோர் குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மூவரை, குற்றமற்றவர்கள் என நிரூபித்து வவுனியா நீதிமன்ற நீதவான் மா. இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார்.
2.
50 கோடி இழப்பீடு கேட்டு சுமந்திரனுக்கு கடிதம்!!
மதுபானசாலை விவகாரம் தொடர்பில் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அங்கஜனின் தந்தையாரான இராமதாதன் எம்.ஏ. சுமந்திரனுக்கு தனது சட்டத்தரணி மூலம் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
3.
இலங்கையில் தோல் புற்றுநோய் அதிகரிப்பு!!
அண்மைக்காலமாக இலங்கையில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல்நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சிறியானி சமரவீர தெரிவித்துள்ளார்.
4.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!!
நடப்பு ஆண்டில்ஜஇதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
5
யாழில் கைதான இளம் பாடகர்கள்!!
வங்கி கணக்கிற்கு பெருந்தொகையான பணம் வந்தமை காரணமாக மூன்று இளம் பாடகர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
செய்தியாளர் – சமர்க்கனி