இன்றைய பத்திரிகையில் (25.07.2024- வியாழக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!
News
1.
பரீட்சை நாட்காட்டியில திருத்தம்!!
பரீட்சைகள் நாட்காட்டியைத் திருத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
2.
பொறுப்பு கூறும் கடமை இலங்கை அரசாங்ஙத்தினுடையதே!!
பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுங்கான மனித உரிமை மீறல், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
3.
முதலில் பொதுத் தேர்தல்!!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கபாபடும் என தகவல்கள் வெளியாகியுள்ள.
4.
தேசபந்து தென்னக்கோனுக்கு விதிக்கப்பட்ட தடை!!
பொலிஸ் மா அதிபராகச் செயற்பட தேசபந்து தென்னக்கோனுக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
5.
முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச்சூடு!!
முல்லைத்தீவு – துணுக்காய், கல்விளான் பகுதியில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல் காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் ஏற்றுதல் முரண்பாடு தொடர்பிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் – சமர்க்கனி