1.
ஐரோப்பிய எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். இளைஞன்!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஐரோப்பிய எல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதான எஸ்.ஜதுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
2.
உள்ளூராட்சித் தேர்தல் காலம் அறிவிப்பு!!
2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
3.
பொருளாதார சீர்திருத்தம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் கருத்து!!
கடினமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது எனவும் சர்வதேச சீர்திருத்தங்களின் பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் எடுத்துரைத்துள்ளார்.
4.
மீண்டும் தொடங்கும் இலங்கை இந்திய ரயில் பாதைத் திட்டம்!!
இராமேஸ்வரம் – திருமலை இடையேயான ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான நெடுஞ்சாலை ரயில்பாதைத் திட்டம் விரைவில் ஆரம்பமாகும் எனவும் இதற்கான முழுச்செலவையும் இந்தியாவே பொறுப்பேற்கும் எனவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
5.
முல்லைத்தீவு சென்ற கனடா தூதுவர்!!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து, மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரனிடம் கலந்துரையாடியுள்ளார்.
6.
மன்னார் மாணவி சாதனை!!
மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் பயிலும் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார்.
குறித்த போட்டியானது கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி