இன்றைய பத்திரிகையில் ( 14.09.2024 – சனிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1.
உயர தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!!
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையானது எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2.
பிரதேசவாதம் பேசி, கிழக்கை இழக்கும் அபாயம்!!
பிரதேசவாதத்தை முன்னிறுத்தி கிழக்கில் பொது வேட்பாளருக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரத்தினால் கிழக்கு மாகாணத்தைச் சிங்களவர்களிடம் பறிகொடுக்க முயல்கிறார்கள் என ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
3.
யாழ் வருகிறார் ரணில் விக்கிரமசிங்க!!
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
4.
உடனடிப் பதவி நீக்கம் செய்யப்பட்டார் நீதிபதி கணேச ராஜா!!
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்று (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
5.
சங்குக்கு மாத்திரமே புள்ளடி இட வேண்டும்!!
ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் எனவும் விருப்பு வாக்குகளைப் போட வேண்டாம் எனவும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கூறியுள்ளார்.
6.
தமிழர் பகுதியில் நரபலி பூஜை இடம்பெற்றதா!!
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலத்திற்கு அருகாமையில், சமய வழிபாடுகள் இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா?என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தியாளர் – சமர்க்கனி