இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
மீண்டும் யாழ் தேவி!!
நாளை திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் யாழ்.தேவி மீண்டும் இயங்கவுள்ளது.
2.
பிரதான கட்சிகள் ஒன்றிணைவு!!
பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணையும் சங்கமம் நிகழலாம் என ஐ.தே.கவின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
3.
கண்காணிக்கிறது இந்தியா!!
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பிலும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் தொடர்பிலும் இந்தியா அவதானம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
4.
குற்றத்தை நிரூபிக்குமாறு கோரும் நாமல்!!
எம் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும் எனவும் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் விமர்சனங்களை முன்வைக்கமுடியாது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
5.
கொலையாளிகள் , கொள்ளையர்கள் தப்பவே முடியாது!!
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் கொலையாளிகள் , கொள்ளையர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
6.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அவதானம்!!
2025 பெப்ரவரியில் கொண்டு வரப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி