பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படத்தை அரச நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் போது பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளரான யசரதவின் கையெழுத்துடனான அறிவுறுத்தல் சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி