
ஆடம்பர வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தனினிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் மோப்ப நாயான பெர்சியின் காட்டிக்கொடுப்புக்கு அமைய, வீட்டின் கழிவறை நீர்த்தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை, நலகஸ்தெனிய பகுதியில் உள்ள ஆடம்பரமான இரு மாடி வீடொன்றிலேயே இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.