இலங்கைசெய்திகள்

வெளிநாடு சென்ற கரவெட்டி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பிரித்தானியா செல்லும் நோக்கத்துடன் சென்ற இளைஞர் ஒருவர் அரபு நாடு ஒன்றில் திடீர் சுகயீனமுற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சி செய்த நிலையில் அரபு நாட்டில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவத்தில் இலங்கேஸ்வரன் மைதிலன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் புலம் பெயர் நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் இடைநாடுகளில் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button