கவிதைமுத்தமிழ் அரங்கம்.

வாசிக்க வயதில்லை -கவிதை!!

poem -read

எழுதியவர் – கமலக்கண்ணன்

எண்ணும் எழுத்தும்
அறிவேன் அதனால்
எண்பதைக் கடந்தும்
எளிதாய்ப் படிப்பேன்.
கண்கள் சுருங்கி
கருத்தது ஆனாலும்
கண்ணாடி அணிந்தே
கருத்தைக் குடிப்பேன்.
திண்ணம் உடலில்
தீர்ந்தே போனாலும்
எண்ணம் அதனில்
எழுத்தை நிறைப்பேன்.
வண்ணம் தெரியாத
வண்ணம் ஆயினும்
வெண்மை கருமையில்
வேகமாய் வாசிப்பேன்.
மண்ணை அடையும்
முன்பில் வரையிலும்
கண்டம் ஏழையும்
காகிதத்தில் சுவாசிப்பேன்.

Related Articles

Leave a Reply

Back to top button