இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!!

vavuniya

Roundcube Webmail :: வவுனியாவில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு. நேற்று (23) காலை 8.30 மணி முதல் இன்று (24) காலை 8.30 மணிவரையான நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் தா . சதானந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் அதிக மழை வீழ்ச்சி இன்றையதினம் பதிவாகியுள்ளது. இக்காலநிலை மாற்றம் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார் . 
வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையினால் மக்களின் இயல்பு நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் மழை வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அத்துடன் கன மழையினால் பாடசாலை செல்லும் மாணவர்கள் மிகவும் குறைந்தளவில் இன்று பாடசாலை சென்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது . 

செய்தியாளர்  கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button