இலங்கைசெய்திகள்

வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு!!

vavuniya

வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு வவுனியா மாவட்டத்தில்  காட்டு யானைகள் எட்டு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன .


வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் நவம்பர் (22) இன்று வரையான காலப்பகுதியில்  செட்டிகுளத்தில் 3, நெடுங்கேணியில் 3 , வவுனியாவில் 2 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளது.


காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றதுடன் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்கின்றது . இதனால் மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வசித்து வருகின்றனர்.
கடந்த வருடம் 2020 ஆண்டு வவுனியா மாவட்டத்தில் 10 யானைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button