இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

யாழ். பல்கலைக் கழகத்தில் குவிந்துள்ள இராணுவத்தினர்!!

Jaffna

இலங்கையில் இன்று (21) மாவீரர் வாரம் ஆரம்பமாகின்ற நிலையில், இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் அதிகார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கும் நீதிமன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இன்று யாழ்.பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின், சில பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button