இலங்கைசெய்திகள்

முக்கிய அறிவிப்பு விடுத்த யாழ் மாவட்ட அரச அதிபர்!!

jaffna

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்வதாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .

மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்த அவர்,

யாழ் மாவட்டத்தில் இற்றுவரை 469 மரணம் பதிவாகியுள்ளது தற்பேதைய சுழலில் 634 குடும்பங்கள் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும். அத்துடன் சமுக இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ளபோதும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் அதனை கட்டாயம் பின்பற்றபடவேண்டும் எனவும் அவர் கூறினார் . அவ்வாறு செய்வதன்மூலமே மாவட்டத்தில் கொரோனாவை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாம் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருப்போமோ அத்தகைய அளவிற்கு எமது சமுதாயத்தை பாதுகாத்து கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

Related Articles

Leave a Reply

Back to top button