அக்கறைப்பற்று ஆதார வைத்திய சாலையில் பொது வைத்திய நிபுணராக கடமையாற்றி தற்போது இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள வைத்தியர் P.K.ரவீந்திரன் அவர்கள் தான் கடமையாற்றிய காலந் தொட்டு இன்று வரை அட்டாளைச்சேனையைச்சேர்ந்த விஞ்ஞானத்துறையில் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அவரது கற்றல் நடவடிக்கைக்காக தனது சொந்த நிதியின் மூலம் உதவி செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது (2022) வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சையில் அம்மாணவி மாவட்ட மட்டத்தில் விஞ்ஞானத்துறையில் 10 ஆம் இடம் பெற்று வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளார்.
குறிப்பிட்ட வைத்தியருக்கு மாணவியின் நிலைமையை தெளிவு படுத்தி அவர் மூலமான சகல உதவிகளையும் அட்டாளைச்சேனையை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் மாணவிக்கு பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இங்குள்ள மக்களின் மனதை வெகுவாக கவர்ந்ததுள்ள வைத்திய கலாநிதி P.K.Ravindran வைத்திய துறையில் மட்டுமன்றி இங்குள்ள மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் துறைகளிலும் அதீத பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
தான் பணியாற்றிய சேவை நிலையங்களின் பௌதீக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி அந்த நிறுவனங்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
அதோடு இவர் தன்னை நாடிவரும் நலிவுற்ற நோயாளிக போற்றத்தக்க பணியினை ஆற்றிவருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சாதி மதங்களை கடந்து மனிதத்தை வாழ வைத்து ஒரு பெண் வைத்தியர் உருவாகவும் காரணமாக இருந்த வைத்தியர் P.K.ரவீந்திரன் அவர்களுக்கும் , சிறந்த பெறு பேற்றை பெற்ற மாணவிக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.