Breaking Newsஇலங்கைசெய்திகள்

போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்!!

School

பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர்களில் இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச் சென்று அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாக விசாரணையின்போது தெரியவந்தது.

மேற்படி மாணவிகள் 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று உள்ளெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பாடசாலையின் அதிபர், மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button