
பாடசாலைக்குச் சென்ற மாணவி வைத்தியசாலை சென்ற துயரம்….
இன்று யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8பி இல் கல்வி கற்கும் ப.சரணிகா என்ற மாணவியும் அவரது தந்தையுமே படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து இலக்கத் தகடற்று காணப்படுவதுடன் அப் பேருந்து மிகவும் பழையது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.