இலங்கைசெய்திகள்

நுணாவில் பகுதியில் உதவி வழங்கல்!!

help

நுணாவில் மேற்கு ஆனைக்கோட்டை குளத்தை சூழவுள்ள பகுதியில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 6 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதிப்பங்களிப்பினை நகர சபை உறுப்பினர் திரு. வீ. விஜயேந்திரன் அவர்கள் தனது மாதாந்த கொடுப்பனவில் வழங்கியிருந்தார்.


தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அன்றாட தேவைகiளுக்கே அல்லல்படும் நிலையே பலருக்கு உள்ளது. இந்திலையில் இத்தகைய உதவிகள் மிகத்தேவையான ஒன்றாகும். சமூகஆர்வலர்கள் இவ்வாறான உதவிகளில் இணைந்து செயற்படுவது பாராட்டிற்குரிய விடயமாகும்.


அப்பகுதியைச் சேர்ந்த திருமதி. கீர்த்தி கோபி என்பவரே தரவுகளை ஒழுங்குபடுத்தி வழங்கியிருந்தார். தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையம் – சமூக மேம்பாட்டு இளைஞர் அணியினருடன் இணைந்து பணிசெய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

Related Articles

Leave a Reply

Back to top button