இலங்கைசெய்திகள்

அடுப்பு வெடிப்பு- விசாரணை வளையத்திற்குள் லிற்றோ!!

Litro

எரிவாயு சிலிண்டர்களினால் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு இன்று முத்துராஜவலையிலுள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு  ஆய்வுகளுக்காக விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் நேற்று (02) பொலிஸாருடன் இணைந்து மேல் மாகாணத்தில் கொட்டாவ, அத்துருகிரிய, ஹங்வெல்ல மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்ளில்  வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற  வீடுகளுக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button