கவிதைமுத்தமிழ் அரங்கம்.

கனவுகளும் … நினைவுகளும்….!!

கருத்தரித்த கனவுகள்
கருக்கலைந்து போனது…
பருவத்தின் பாடலொன்று
உருவத்தை சிதைத்தது….

இலட்சியப் பயணத்தை
எதுதான் பறித்தது?
விதியா?
பசியா?
சதியா?

ஆசைகள் அறுந்தது
வேசங்கள் வெளித்தது
தாபமும் மோகமும்
தள்ளி எங்கோ போயிற்று……

கொண்டவனோ விட்டுவிட்டான்…
கோதை இவள் போதுமென்று..
வந்த வரம் இரண்டுமே
வதைபட்டு நிற்கிறதே…

பொக்கிஷம் தவறி
புளுதிக்குள் போனதேன்….
கையிலே கனக்கிறதே
குழந்தைச் சுமைகளும்….

பாடாத தேனீக்களை
பாடவைக்க யாருண்டு?
இறைவா உன் இசையில்
நாங்கள் என்ன ராகமானோம்?

கோபிகை

Related Articles

Leave a Reply

Back to top button