உலகம்செய்திகள்

ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் கட்டிடங்கள் குலுங்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் தீவின் மேற்கு பகுதியினை GMT 09.05 மணியளவில் 37 கிலோ மீட்டர் (23 மைல்) அழத்தில் தாக்கியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை மற்றும் உயர் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை இந்த நிலகடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்றும், கரையோப் பகுதியில் பாதுகாப்பாக உள்ளதாகவும் இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் தெரிவித்துள்ளது.  

Related Articles

Leave a Reply

Back to top button