இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

அனுராதபுரத்தில் ஜனாதிபதியின் உருவப்படம் மீது தாக்குதல்!

அனுராதபுரம் – பதவியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உருவப்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்வதற்கு இரசாயன உரங்கள் கோரி அனுராதபுரத்தில் பதவியா பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உருவப்பம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறையில் நாமல்கம பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஜனாதிபதி உடையணிந்த வந்த ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button