இலங்கைசெய்திகள்

ஜனவாி முதல் ஆரம்பமாகும் புலம்பெயர் பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்!

புலம்பெயர் பணியாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அடுத்த வருடம் ஜனவரி முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களை வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கு பதிலாக பயிற்றப்பட்ட பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்புவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் பணியாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நினைவூட்டினார்.

Related Articles

Leave a Reply

Back to top button