ஜெய்பீம் திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றிருந்தாலும் வன்னியர் சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
5 கோடி நஷ்ட ஈடுகேட்டு பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதோடு, சூர்யா நடிப்பில் வெளியாகு திரைப்படங்களை வெளியிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம், அவர் வெளியே நடமாட முடியாது என்றெல்லாம் பாமகவினர் மிரட்டல்கள் விடுத்தனர். மேலும், சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தார்.
ஆனாலும், அக்கட்சியினரை தவிர ரசிகர்கள், பொது ஜனங்கள், மற்ற அரசியல்வாதிகள் என பலரும் அப்படத்தை பலரும் பாராட்டினர். அதோடு டிவிட்டரில் #WeStandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆனது. இந்த பிரச்சனையை விட்டு விடும்படி இயக்குனர் பாராதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு கடிதமும் எழுதினார். ஆனால், சூர்யாவின் மீதே தவறு என்கிற ரீதியில் அன்புமணி ராமதாஸ் பாரதிராஜாவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் இப்படி நிற்காமல் சென்று கொண்டிருந்த நிலையில், ஜெய்பீம் பட இயக்குனர் ஜானவேல் ராஜா ஜெய்பீம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துர்தஷ்டவசமானது. பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே சூர்யாவின் நோக்கம் எனக் கூறியிருந்தார். மேலும், யார் மனமேனும் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக பழங்குடி இனத்தை சேர்ந்த இருளர் இனத்தவர்கள் களம் இறங்கியுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பழங்குடி நடோடிகள் கூட்டமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பாமகவுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்கள் கையோடு சாரைப்பாம்பு, நல்ல பாம்பு, எலிகள், பூம் பூம் மாடு ஆகியவற்றை கொண்டு வந்தனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடந்தால் அவர்கள் மீது பாம்பை கொண்டு ஏறிவோம் என அவர்கள் ஆக்ரோஷமாக கூறினர்.