கண்ணீர் அஞ்சலி

காலம் பறித்ததோ…..காலத்தின் முத்தொன்றை…..

death

காலம் பறித்ததோ
காலத்தின் முத்தொன்றை…..

ஊடகப் பணியின்
ஒப்பற்ற சிகரத்தை
உன்னத வாழ்வின்
உயரிய சரிதத்தை
காலம் பறித்ததோ
காலத்தின் முத்தொன்றை…

வீரகேசரி தினபதி
உதயன் காலைக்கதிர் என்று
பேனா முனை சுழற்றி
பெருந்தடம் பதித்தவர்…..
காலம் பறித்ததோ
காலத்தின் முத்தொன்றை…..

நெருக்கடி காலத்தில்
நிமிர் பணி செய்தவர்
இன்னல்கள் சூழ்ந்த வேளை
இறங்காத கோமகன்….
காலம் பறித்ததோ
காலத்தின் முத்தொன்றை…..

ஊடகத் துறையை
உயிரென நேசித்த
வாழ்வின் நாளெல்லாம்
அதனையே சுவாசித்த
ஊடகப் புத்தகம்….
காலம் பறித்ததோ
காலத்தின் முத்தொன்றை…..

ஊடக உலகிற்கு
உதாரணம் ஆனவர்
தமிழ்தாய் பூரித்த
வட்டூரின் குலமகன்…
காலம் பறித்ததோ
காலத்தின் முத்தொன்றை…..

அன்னைத் தமிழின்
பாதக்கமலங்களில்
இளைப்பாறுதல் பெற்றுவிட்ட
உம் ஆத்மாவின் சாந்திக்காய்
இரு கரம் கூப்பி தொழுகின்றோம்.

ஓம்…சாந்தி..சாந்தி…

ஐவின்ஸ் தமிழ் இணையதளம்

Leave a Reply

Back to top button