இலங்கைசெய்திகள்

“ஏர்நிலம்” தொண்டமைப்பின் அமுதம் கல்வித் திட்டத்தின் 5வது ஆண்டு நிறைவு!!

Kilinochchi

ஏர்நிலம் தொண்டமைப்பினரால் முன்னெடுக்கப்படும் அமுதம் கல்விச் செயற்பாட்டின்5வது ஆண்டின் நினைவு நிகழ்வானது 04.10.2025 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்க மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது..

ஏர் நிலம் தொண்டமைப்பின் நிறுவுநர் சுவிற்சர்லாந்து வாழ் திரு.து.திலக்(கிரி),நிர்வாக இயக்குநர் திரு.தனம் நித்தி ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தொண்டமைப்பின் பிரதான ஆலோசகர், மேனாள் முதல்வர் கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம் அவர்கள் தலைமை தாங்கினார்.

கிளிநொச்சி மக்கள் வங்கி மேலாளர் திரு செல்லத்துரை சரத்சங்கர், கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவுநர் திரு வே.இறைபிள்ளை,

கிளி/திருவையாறு உயர்நிலைப் பள்ளி முதல்வர் திரு.வி.விக்னராசா ஆகியோரும் அமுதம் கல்வித் திட்ட பிள்ளைகள்,பெற்றோர்கள் ஏர் நிலம் தொண்டமைப்பின் கிளிநொச்சி,முல்லைத்தீவு,மன்னார்,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் செயலாற்றுநர்கள்,ஆர்வலர்கள்,

தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் இந்திகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தினை , குறள்பாவினை செல்வன் பி.கரீசனும் ,வரவேற்பு நடனத்தினை செல்வி ஜே.யஸ்மிதாவும் வழங்கினர்,

வரவேற்புரையினை சமாதான நீதவானும்,கிளிநொச்சி மாவட்டச் செயலாற்றுநருமான திருமதி வதனா ரதீஸ்வரன் அவர்கள் ஆற்றினார்.தொடர்ந்து,

அமுதம் கல்வி திட்டத்தின் பயன்கள் தொடர்பில் சிறப்புரையினை இணைப்பாளரும் கவிஞருமான மன்னார் பெனிலும் மகிழ்வுரையினை இணையவாயிலாக சுவிற்சர்லாந்திலுருந்து ஏர் நிலம் நிர்வாக இயக்குநர் திரு.தனம் நித்தியும் வழங்கினார்கள்.

மாணவர்களின் நிகழ்வுகளும் சிறப்புற இடம்பெற்றன.

பல நாடுகளில் இருந்தபடி அமுதம் கல்வி திட்டத்தினை தாங்கும் நிதியாளர்கள் விபரங்கள் வாசிக்கப்பட்டு பயனாளி பிள்ளைகளுக்கான நிதி,வங்கி புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன்

முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் முறிகண்டி லக்சிதரன் நன்றி உரையினையும் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Back to top button