நடாளுமன்ற உறுப்பினர் ராவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உயர்பீட கூட்டத்தை நிறைவு செய்துகொண்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக் கலந்து கொண்டிருந்தார். மேலும் ஏனையோர்கள் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ள இயலாது என அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.