இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் விசேட ஆய்வாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

srilanka

Country of Sri Lanka highlighted on globe. 3D illustration with detailed planet surface isolated on white background. Elements of this image furnished by NASA.

இலங்கையின் முக்கிய பிரச்சினை, மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதே காரணம் என தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் அறிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“கொவிட் தொற்றானது இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றினால், பல பிரச்சினைகளை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்தால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளும் உண்டு.எனினும் , இலங்கையின் நெருக்கடிக்கு காரணம், மொத்த உற்பத்திக்கு அமைவாக நடைமுறையில் உள்ள கடன் அதிகமாக இருப்பதேயாகும்.

எனவே, எதிர்காலத்தில் கடனைச் செலுத்தும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பது முக்கிய தேவையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button