இன்றைய (13.08.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!!
யாழ்.அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
2.
புதிய பாராளுமன்றம் மூலமே சமஷ்டியைத் தீர்மானிக்கலாம்!!
பலம் மிக்க பாராளுமன்றம் அமையும் பட்சத்தில் சமஷ்டி பற்றித் தீர்மானிக்க முடியும் என தன்னைச் சந்தித்த தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் ஜனாதிபதி தேரிவித்துள்ளார்.
3.
கல்வி கற்பதற்கு யப்பான் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!
ஜப்பானில் உயர் கல்வி கற்க சென்ற இலங்கை இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவ துயரத்தில் குறித்த இளைஞனின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
4.
பொதுக்கட்டமைப்பிற்கு பிரேமதாசவும் அழைப்பு!!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
5.
மாணவி கூட்டுவன்புணர்வு – மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த தண்டனை!!
தனமல்வில பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் கைது 17 மாணவர்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், 14 பேரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளனர்.
6.
ஒருநாள் சம்பளம் ரூ. 1700 – தீர்மானம் நிறைவேற்றம்!!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரு. 1700 வழங்குவதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் – சமர்க்கனி