இன்றைய (10.10 .2024 – வியாழக் கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1.
ஜனாதிபதிக்கு ஆதரவளிகாகும் வத்திக்கான்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நியாயத்தை வழங்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுக்கும் முயற்சிகளுக்கு வத்திக்கான் முழு ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிரையன் உடக்வே ஆண்டகை தெரிவித்துள்ளார்.
2.
தமிழ் மக்களுக்கு தமிழரசால் எந்தப் பயனும் இல்லை!!
தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறிச் செயற்படுகிறது. எதிர்காலத்தில் , தமிழரசுக் கட்சியால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
3.
இலங்கை – விமட்நாம் விமான சேவை விரைவில்!!
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) இடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.
4.
மன்னார் மனிதப்புதைகுழி ஆய்வு!!
மன்னார் ச.தொ.ச கட்டடம் அருகை உள்ள மனிதப்புதைகுழி ஸ்கான் மூலம் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
5.
யாழில் ரயில் மோதி ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கடவை இல்லாத இடத்தில் புகையிரதப் பாதையைக் கடந்த குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.