இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!

News

 1.

வடமராட்சி – பருத்தித்துறையில் கைக்குண்டுகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் – வடமராட்சியிலுள்ள பருத்தித்துறை கொட்டடி பகுதியில் பெருமளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

2.

தேர்தல் திகதி மாற்றமா!!

பொதுத்தேர்தைஅ நவம்பர் 14 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சட்ட விதிகளுக்கு அமைய குறித்த திகதி மாற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

3.

வழமைக்குத் திரும்பியது அறுகம்குடா!!

வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஸ்தம்பித்திருந்த பொத்துவில் – அறுகம்குடா கடற்பகுதி வழமைக்குத் திரும்பியுள்ளதாக விடுதி உரிமையாளர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

4.

தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது கடுமையான தாக்குதல்!!

யாழ்.கோப்பாயில் உள்ள கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.

காற்றாலை திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு!!

நாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளுடன்  கடந்த ஆட்சியில் ஒப்பந்தம்  செய்யப்பட்ட 40 எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6.

தாக்குதல் மூளை போதைப்பொருள் வியாபாரி!!

பொத்துவில் – அறுகம்குடா தாக்குதல்தாரி போதைப்பொருள் வியாபாரி என சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button