இலங்கைசெய்திகள்

இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே விரட்டியடிப்பார்கள் – சம்பந்தன்!!

srilanka

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசு  சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் ஐ.ம.சக்தியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. கோட்டாபய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் கலந்துகொண்டதாக இதன்போது கூட்டமைப்பு தலைவர் சுட்டிகாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன் தினம் (16) அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நாடொங்கும் போராட்டங்கள் விஸ்வரூபமடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு. அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் இணைந்துள்ளனர். இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button