சுற்றாடல் அமைச்சு 180 மில்லி லீற்றர் மதுபானப் போத்தல்களை தடை செய்வதற்கான தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
பாவனைக்கு பின்னர் சிறியளவிலான இந்த மதுபான போத்தல்கள் பெருமளவில் சுற்றுசூழலில் வீசப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 10 கோடிக்கும் அதிகமான போத்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேபோன்று பயன்படுத்தப்பட்ட போத்தல்களில் நூறு வீதம் சுற்றுசூழலுக்குள் வீசப்பட்டுள்ளது. மேலும் குறித்த போத்தல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் இந்த போத்தல்களைச் சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவது இல்லை என்பது தெரியவந்துள்ளது.