உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் முக்கிய அறிவிப்பு!!

Britice

 இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும்  நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கான இறக்குமதியை இலகுபடுத்தும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரித்தானிய அரசாங்கம் வழி அமைத்துள்ளது..

அதன்படி, ஆடைகள், உணவுப் பொருட்கள், மின்னணுவியல் சாதனங்கள் போன்றவை இந்தச் சலுகையின் கீழ் வரும் பொருட்களின் பட்டியலில் அடங்கும்.

இதன் மூலம், அந்த நாடுகள் பிரித்தானியாவுக்கு சுங்க வரியின்றி அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்யலாம் என பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு பிரித்தானியாவுக்கான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button