தொலைத்தொடர்புக்கான வரிகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்புச் செய்யப்படுகின்றன.
இதன்படி, 11.25 சதவீதமாக இருந்த வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வற் வரியும் கடந்த 1ஆம் திகதி முதல் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து செலவீனங்களும் அதிகரிக்கப்பட்ட நிலையில் தொலைத்தொடர்பு கட்டணமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.