
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உட்பட்டோரின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, நிதி குற்ற புலனாய்வு துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த விசாரணை மற்றும் கைதுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும் எனவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சரினால் பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.