சூழ்ச்சிகளை முறியடித்து மணி வெற்றி! – யாழ். மாநகர சபை ‘பட்ஜட்’ நிறைவேற்றம்
அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் இன்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களையடுத்து பாதீடு மீது பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.
பாதீட்டுக்கு ஆதரவாக மேயர் அணியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும் என 24 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் என 21 பேர் எதிராக வாக்களித்தனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.