யுக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களை கடந்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்த நிலையில்,
யுக்ரைன் தலைநகரான கீவ் இல் ரஷ்யாவுக்கு எதிராக இடம்பெற்று வரும் போரின் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஏவுகணைகளின் எச்சங்கள் என்பனவும் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைன் தலைநகர் கிவ்வை, கைப்பற்றும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, யுக்ரைனின் உற்பத்தி மையமாக திகழும் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகரின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும் அங்குள்ள மிகப்பெரிய இரசாயன ஆலை யுக்ரைன் படை வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த ஆலையில் ஏராளமான பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.