இன்றைய பத்திரிகையில் (03.08.2024 – சனிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
தமிழர் இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு – ரணில்!!
யாழ்ப்பாணத்தில் கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் புதிய அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பை முன்னேற்றுவதற்கு கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இனப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2.
இணைய விசா முறைமைக்குத் தடை!!
இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
3.
இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கும் சீனா!!
இலங்கையில் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு சீனா, இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.
4.
பொன்சேகா – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கிடையே திடீர்ச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
5.
ஜனாதிபதி தேர்தலில் நெருக்கடி ஏற்படலாம்!!
ரணில் விக்கிரமசிங்க அவசரமாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரச்சினை என்பவற்றைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அனுர குமார, வெளித்தரப்புகளால் ஜனாதிபதி தேர்தலில் நெருக்கடி ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
6.
ஒரு நாளில் 25 மணித்தியாலங்கள்!!
பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா, ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகிச் செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செய்தியாளர் – சமர்க்கனி