இன்றைய (21.08.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றத் தயார் – இந்திய உயர்ஸ்தானிகர்!!
இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றத் தயார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யா தெரிவித்துள்ளார்.
2.
மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பு!!
பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
3.
12 வயது மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்ததனால் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4.
பாடசாலை மாணவியை வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்க மறியல் நீடிப்பு!!
மட்டக்களப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை வார்த்தைகள் மூலமாக தொந்தரவு செய்து வந்த ஆசிரியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாணவி தனக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து இச்சம்பவம் வெளியே வந்துள்ளது.
5.
உலகில் மிக நீண்ட முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!!
இலங்கை – கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.