இன்றைய (19.08.2024- திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகளின் தொகுப்பு சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
ஆழத்தில் மீன் பிடித்த மீனவர் மரணம்!!
ஒட்சிசன் சிலிர்டரைப் பயன்படுத்தி கடலில் சுமார் 100 மீற்றர் ஆழத்தில் மீன் பிடித்த மீனவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
2.
தேர்தல் அறிக்கையின் பின்னரே முடிவு!!
ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னரே மத்திய குழு கூடி யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யும் என இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.
3.
தந்தை செல்வாவின் நினைவிடத்தில் வணங்கி பிரசாரம் ஆரம்பம்!!
தந்தை செல்வாவின் நினைவிடத்தில் வணங்கி தனது பிரசாரத்தை ஆரம்பித்தார் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன்.
4.
சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு!!
ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
5.
கூலி வேலைக்குச் சென்றவர் நெஞ்சு வலியால் மரணம்!!
யாழில் வேலைக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா ரகுமாதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
6.
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை 19,20ஆம் திகதிகளில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி