அஹமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு விஞ்ஞானிகள் வியாழனை கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த கிரகம் 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கிரகம் வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரிய கோளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேலும் இதன் தரை தளம் மிக அதிக வெப்பம் கொண்டாதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இந்த ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினரும் இருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.