இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரைப்படத் துறையில் தனது திரை இசை வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அவர் அண்மையில் ரசிகர்களுடன் ட்விட்டரில் எதை வேண்டுமானால் கேளுங்கள் என்ற உரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதில், தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் யோசனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அவ்வாறு வாழ்க்கையை படமாக்கினால் அதில் யாரை நடிக்க வைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு யுவன் பதிலளித்திருந்தார்.
நடிகர், இயக்குநர்கள் குறித்து தற்போது தன்னிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் கூறினார்.
அவ்வாறு யோசனை இருந்தால் அதில் நானே நடிப்பேன் என்று யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
இந்த காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா தென்னிந்தியாவின் முக்கிய இசைக்கலைஞர்களில் ஒருவராவர்.
இளைஞர்களிடையே அவருக்கு பிரத்தியேகமானதொரு ரசிகர் பட்டாளம் உண்டு.
யுவன் ஷங்கர் ராஜா 1997 இல் இசைத்துறையில் அறிமுகமானார்.
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு என 150 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
அண்மையில் அவரது இசையமைப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படப் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.