கட்டுரைசெய்திகள்

யார் மீது தவறு!!

Wrong

நமது நாட்டுக்கு போத்தல் தண்ணீர் எதற்கு,

நிலத்தை தோண்ட வற்றாத நீரூற்று, ஆறு, குளம், ஏரி, குட்டை, பருவம் தோறும் பொழியும் மழை என்று நீர்வளம் நிறைந்த நாட்டில் நீ அடைக்கப்பட்ட போத்தல் தண்ணீர் தான் குடிப்பேன் என்றால் உன்னை போன்ற ஏமாளியும், கோமாளியும் வேறு உண்டோ…

எந்தப் புள்ளியில் நீ ஏமாற்றப்படுகின்றாய் என நீ அறியாது, உணராது போனால் உன்னை யார்தான் காப்பாற்ற முடியும்.

நீ ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் தெரியாமல் அதை உணராமல் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் யார் யார் மீதோ பழி சொல்கின்றாய்…

அரசு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை, அமைச்சர்கள் சரியில்லை, அதிகாரிகள் சரியில்லை, அவன் சரியில்லை, இவள் சரியில்லை என்று பழியை இன்னொருவர் மீது போட்டு நீ நல்லவன் போல் நடிக்கின்றாய்.

நீ சரியில்லை நீ தான் சரியில்லை…….

முதலில் உன் தவறுகளை பார் அதை ஒப்புக்கொள் அதை சீராக்கு அதிலிருந்து மாற்றம் நிகழட்டும். அதை விடுத்து மற்றவர்களைக் குறைகூறி உன்னை உத்தமன் போல காண்பிக்க முயலாதே. முதலில் அதை நிறுத்து.

நீயே இந்த நாட்டின் மன்னன் ஆனாலும் உன்னை குறைசொல்ல பெரும் கூட்டம் இருக்கும். யாரையும் யாரும் முழுமையாக ஏற்கப் போவதில்லை. அப்படி எல்லோராலும் ஏற்றுக் கொண்ட நபர் என்று இதுவரை ஒருவராவது உண்டா சொல்.

நீ வந்ததே உன்னைச் சீர்படுத்தி கொள்ள…

உன்னைச் சீர்படுத்தி கொள்ளாமல் வேறு எதை சீர்படுத்தப்போகின்றாய்.

முதலில் நீ ஏமாற்றப்படும் புள்ளிகளை கண்டுணர், அதில் இருந்து வெளியே வா, ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்து வெளியே வா….

முதலில் நீ விடுதலை பெற வேண்டும்…

நீ சுதந்திரத்தை அனுபவிக்காத வரை நீயும் அடிமையே. இங்கே ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எஜமானாக இருக்கின்றது அவ்வளவு தான்.யாரிங்கே மிகப் பெரும் அடிமை என்பதே போட்டி. அந்த போட்டியில் நீயும் ஒரு பங்காளனாக இருக்காதே….

மிகெய்ல் நைமி சொன்னது போல்…

“எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றைப்போல் திகழுங்கள்”.

Related Articles

Leave a Reply

Back to top button