செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

உலகம் அழியப்போகிறதா – அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

World destruction

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, ‘2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக’ கணித்துள்ளது.

இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த இயந்திரத்தால் கணிக்கப்பட்ட சில விடயங்கள் ஏற்கனவே பலித்துவருவதாக கூறப்படுகின்றது.

உதாரணமாக, பூமியில் இயற்கை வளங்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் குறைந்துகொண்டே போவதை கூறலாம். இந்த இயந்திரத்தின் கணிப்புகள், பிறப்பு வீதம் முதல் மாசுபடுதல் வரையிலான பல்வேறு விடயங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

மாசுபடுதல் என்பது மிகவும் மோசமாகி, அது மனிதர்களை கொல்லத்துவங்கும், ஆகவே, மக்கள் தொகை குறையத் துவங்கும், அப்படியே 2040, 2050ஆம் ஆண்டளவில் நாகரீக உலகம் என நாம் அழைக்கும் இந்த உலகம் அழிந்துபோய்விடும் என்கிறது சூப்பர் கம்ப்யூட்டர்.

Related Articles

Leave a Reply

Back to top button