உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் சிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 32 ஓவர்கள் 2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மஹீஸ் தீக்ஷன 4 விக்கெட்டுக்களையும், டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுக்களையும் மற்றும் மதீஷ பத்திரண 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 33.1 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்த பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
14 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
துமித் கருணாரத்ன 30 ஓட்டங்களையும் மற்றும் குசல் மெந்திஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி நேரடியாக உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.