அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதனால் மட்டும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாது என பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைக் கூட்டி, சட்டக் கட்டமைப்பின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் பொறுப்பு தொழிற்துறை அமைச்சுக்கு இருப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
மேலும் தனியார் துறையினருக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுமாறு தொழிற்துறை அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.