இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்குமா!!

Wheat flour

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்,தற்போதைய நிலையில் எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410 ரூபா முதல் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பல சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சுமார் 2,000 வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் கோதுமை மா விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button