துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இங்கு விநியோகம் செய்யப்பட்டவுடன் இந்த மாத இறுதிக்குள் கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம் எனவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக துருக்கியில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஏற்கனவே துருக்கிக்குச் சென்றுவிட்டதாகவும் செப்டம்பர் நடுப்பகுதியில் இங்கு ஏற்றுமதி செய்யப்படும் என நம்புவதாகவும் செப்டம்பர் 15க்குள் முதல் ஏற்றுமதி வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.
துபாயிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா அதிக விலை எனவும் இந்திய ஏற்றுமதி தடை காரணமாக ஏற்கனவே பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கோதுமை மா இறக்குமதியாளர்கள் போதியளவு கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடத் தவறியமையினால் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.